வெள்ளி, 23 நவம்பர், 2012

Blogger-ல் படங்களுக்கான 1GB கொள்ளலவு முடிந்ததா? இதோ இருக்கிறது Dropbox

பிளாகர் –ல் படங்களை அதிகமாக பதிவிடும் பதிவர்கள் பொதுவாக சந்திக்கும் முக்கியமான பிரச்சனை  Google வழங்கும் 1GB மட்டும் கொள்ளலவு.

அதிகமாக படங்களை பயன்படுத்தும் பதிவர்கள் தங்களது படங்களை
இலவச File Hosting தளங்களில் சேமித்து அதன் தொடர்பபை Blogger-ல் பயன்படுத்தி கொள்ளலாம்.

உதாரணத்திற்கு DropBox சேவையை பயன்படுத்தி தங்களது பிளாக்கில் படங்களை பதிவிட



முதலில் DropBox-ல் பதிவுசெய்துகொள்ளவும் (ஏற்கனவே உங்களிடம் DropBox Account இருந்தால் நன்று. இல்லையென்றால் இங்கே கிளிக் செய்யவும்
Get Free Dropbox Account).


பின்னர் பதிவிடவேண்டிய படங்களை DropBox-ல் “Public” Folder-ல் சேமித்து கொள்ளவும். (Public Folder திறந்து சேமிக்கவேண்டிய படத்தினை கிளிக் செய்து இழுத்து உங்கள் Browser Window-வில் விடவும்)



இப்போது DropBox-ல் சேமிக்கபட்ட, Blogger-ல் பதிவிடவேண்டிய  உங்கள் படத்தின் மீது Right Click செய்து Copy public link என்பதை கிளிக் செய்யவும், அதில் தோன்றும் லிங்கை Copy செய்தபின்னர்



Blogger-ல் வழக்கம் போல Insert Image –யை கிளிக் செய்து Upload என்பதற்கு பதிலாக From a URL என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் முன்னர் Dropbox-ல் Copy செய்த லிங்கை Paste செய்யவும்.



இனி உங்கள் வலைப்பூ வழக்கம் போல் செயல்படும். Google-ன் 1-GB கொள்ளலவை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை.

================================================================

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டமிடவும் அல்லது தொலைபேசவும் 9962879268

நன்றி


-ச. இரா.சி

கருத்துகள் இல்லை: