புதன், 14 செப்டம்பர், 2011

CD/DVD - ல் கோப்புகளை எழுத சிறந்த இலவச மென்பொருள்

CD/DVD - ல் கோப்புகளை எழுத சிறந்த இலவச மென்பொருள்


CD/DVD - ல் கோப்புகளை எழுத நாம் பெரும்பாலன நேரங்களில்
நீரோ (Nero - CD/DVD Burning Tool) மென்பொருளை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
நீரோ நன்றாகவே வேலை செய்தாலும் நம் கணிணி வந்தட்டில் எடுத்து கொள்ளும் இடம் அதிகம் (சுமார் 300MB). அதுமட்டுமல்லாமல் இந்த மென்பொருளில் விலையும் அதிகம். (அட நாம எப்போ இதல்லாம் காசுகொடுத்து வாங்கினோம்)

இதைவிட சிறந்த ஒன்று இலவசமாகவே இணையத்தில் கிடைக்கிறது.

InfraRecorder
CD/DVD உருவாக்க தேவையான அனைத்தும் இதில் உள்ளது.



இதன் சிறப்பம்சங்கள

  1. அனைத்து வகையான கோப்புகள், படங்கள், பாடல்கள், வீடியோ மற்றும் கலவையான கோப்புகளையும் சேமிக்கமுடியும்
  2. இரட்டை-அடுக்கு (Dual-layer) டிவிடிகளையும் ஆதரக்கின்றது.
  3. மீண்டும் மீண்டும் எழுதக்கூடிய (Rewritable) டிஸ்க்குகளையும் ஆதரக்கின்றது.
  4. CD/DVD களை ISO மற்றும் CUE/BIN கோப்புகளாக சேமிக்கமுடிகிறது.
  5. CD/DVD களை பிரதி எடுக்கவும்  உதவுகிறது.
  6. ஆடியோ CD-ல் இருந்து MP3 பாடல்களை உருவாக்கவும் உதவுகிறது.

டவுன்லோட் செய்ய
Download
Latest Version

3.90MB



நன்றியுடன்
இரா.சி
9962879268


1 கருத்து:

பால கணேஷ் சொன்னது…

பயனுள்ள பகிர்வு. மென்பொருளைப் பயன்படுத்திப் பார்க்கிறேன். நன்றி.